தேசிய விளையாட்டு விழாவின் இரண்டாவது நாள் இன்று

பொலநறுவையில் நடைபெறும் தேசிய விளையாட்டு விழாவின் இரண்டாவது நாள் இன்றாகும்.

இன்றைய தினம் பொலநறுவை தேசிய மைதானத்தில் மெய்வாண்மை இறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

 

இம்முறை மெய்வாண்மை, வலைப்பந்தாட்டம், குத்துச்சண்டை, உடற்கட்டழகு, கபடி ஆகிய ஐந்து விளையாட்டுகளுக்கான போட்டி பொலநறுவையில் ஏற்படாகி உள்ளன.

 

நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஆயிரத்து 500 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

 

நேற்றிரவு இடம்பெற்ற வலைப்பந்தாட்ட போட்டியில் தர்ஜினி சிவிலிங்கம் தலைமையிலான வட மாகாண அணி சப்ரகமுவ மாகாண அணியை தோற்கடித்தது.