ஒடிசா மற்றும் ஆந்திராவை தாக்கிய டிட்லி புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல் ஒடிசா மற்றும் ஆந்திரா இடையே இன்று காலை கரையைக்கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.
 
புயலின் தாக்கம் காரணமாக ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.
 
முன்எச்சரிக்க விடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஒடிசாவின் கடலோர மாவட்டங்களான புரி, கேந்தரபரா, ஜகத்சிங்பூர், குர்டா, கஞ்சம் ஆகிய 5 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும், ஒடிசா,ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு 1,000 தேசிய பேரிடர் மீட்புப் படையினரை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது.
 
ஒடிசாவில் பள்ளி, கல்லூரிககளுக்கு வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை 836 பாதுகாப்பு முகாம்கள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.