சமூக வலைத்தள பாவனையினால் உங்களை அறியாமலே,நீங்கள் உளரீதியான தாக்கத்திற்கு உட்படுவது பற்றி அறிந்துள்ளீர்களா?

இலங்கையில் சமூகவலைத்தள பாவனை மற்றும் இணையப் பாவனை தொடர்பான 2018ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இதுவரையில் 61 இலட்சம் பேர் Facebook - முகப்புத்தகத்தை பயன்படுத்துகின்றதுடன், அதில் 620,000 பேர் 18 வயதினைவிடக் குறைந்தவர்கள் ஆவர். அத்துடன், 9.2 இலட்சம் பேர் LinkedIn பயன்படுத்துவதுடன், 10 இலட்சம் பேர் Twitter பயன்படுத்துகின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 8.8 இலட்சம் பேர் Instagram பயன்படுத்துகின்றனர். இந்த அனைத்து சமூகவலைத்தளப் பாவனைகளிலும் 30% பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், எஞ்சிய 70% ஆண்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மொத்த சனத்தொகையினை விடவும் அதிகமாக கைத்தொலைபேசி சிம் அட்டைகள் காணப்படுவதோடு, அது 27.98 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. மொத்த சனத்தொகையின் சதவீதமாகப் பார்க்கும் போது அது 131% ஆகும். மொத்த இணையப் பாவனையாளர்களின் தொகை 6.71 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அது மொத்த சனத்தொகையில் 32% ஆகும்.

அத்துடன், சமூகவலைத்தளத்தை பிழையாகப் பாவிப்பதால் நாளுக்கு நாள் அழுத்தத்திற்கு உட்படுகின்ற ஒரு பிரிவை காணக்கூடியதாக உள்ளது. மேலும், சமூகவலைத்தளத்தை பிழையாகப் பாவிப்பதால் முறையீடுகள் அதிகரித்து செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது.


சமூகவலைத்தளப் பாவனை எங்களுடைய மனதை எப்படி பாதிக்கின்றது என்பது தொடர்பான பயனுள்ள வீடியோவை கீழே பாருங்கள்.