ஆசிய கிண்ண சுற்றுத்தொடரில் இருந்து வெளியேறும் இலங்கை அணி

ஆசிய கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடரின் மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தானின் முன்னிலையில் தோல்வி கண்ட இலங்கை அணி, சுற்றுத்தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று அபுதாபியில் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கான் அணி 50 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை அணி 42ஆவது ஓவரில் பத்தாவது விக்கட்டை இழந்து 158 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதன் பிரகாரம், ஆப்கான் அணி 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

 

ஆப்கானிஸ்தானின் சார்பில் ரஹ்மத் ஷா 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். பந்துவீச்சில் திசர பெரேரா ஆகக்கூடுதலாக ஐந்து விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.