அலங்கார மீன் தொழிற்துறைக்கென செயலணி

அலங்கார மீன் தொழிற்துறைக்காக ஒரு செயலணியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அலங்கார மீன் ஏற்றுமதியாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் நீர் உயிரின அபிவிருத்தி ஆகிய துறைகளில் எதிர்நோக்கப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வை காண்பதில் இந்த செயலணி செயற்படும்.
இதனடிப்படையில் அலங்கார மீன் தொழிற்துறையைப் பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து, தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளை வழங்குதல் போன்ற விடயங்கள் இந்த செயலணிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலணி கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சியின் ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.