தோட்ட நீர் தேக்கங்களில் மீன் குஞ்சிகள் விடுவிப்பு

தோட்ட மக்களின் போசாக்கு நிலையை மேம்படுத்துவதற்காக தேசிய நீர் உயிர் உற்பத்தி அபிவிருத்தி அதிகார சபை தோட்டங்களில் உள்ள நீர் தேக்கங்களில் 12 இலட்சம் மீன் குஞ்சிகளை விடுத்துள்ளது.

தோட்ட நீர் தேக்கங்களில் மீன் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் ஹட்டன் ஸ்டெடன் தோட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட பென்மூர் என்ற நீர் தடாகத்தில் இந்த மீன் குஞ்சிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

 

இந்த மீன் குஞ்சிகள் 6 மாத காலப்பகுதியில் 1 1/2 கிலோவுக்கு 2 கிலோவுக்கு இடையிலான எடையை கொண்டதாக வளர்ச்சியடையும் என்று நீர் உயிரின உற்பத்தி அதிகார சபையின் நுவரெலியா அலுவலகத்தின் திட்ட அதிகாரி புத்திக்க துஷான் தெரிவித்துள்ளார்.