ஆசிய வலை பந்தாட்டப்போட்டி - சம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை

2018 ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியில் ஐந்தாவது தடவையாகவும் இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 

சிங்கப்பூர் அணியுடன் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி மோதியது. இந்த போட்டியில் இலங்கை அணி 69 இற்கு 50 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றுள்ளது.

 

இம்முறை இடம்பெற்ற ஆசியவலைப்பந்தாட்ட போட்டியில் பங்குப்பற்றிய எந்தவொரு ஆட்டத்திலும் இலங்கை அணி தோல்வியடையவில்லை. இந்த நிலையில், இங்கிலாந்து – லிவர்பூலில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக வலைப்பந்தாட்ட போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.