ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் புரட்சிகர மாற்றம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பதிவிகளில் அடுத்தவாரம் புரட்சிகரமான மாற்றத்தை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கட்சியில் பெரும் மாற்றம் நடைபெறப்போவது ஏழு வருடங்களின் பின்னராகும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலமையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி கூடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீட குழுக்கூட்டத்தில் கட்சியின் பதவிகளை எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைப்பது முக்கிய ஒரு அங்கமாக அமையுமாறு பதவி மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அங்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை மூன்றாக ஆக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது வீடமைப்பு மற்றும் கட்டுமாண அமைச்சர் சஜித் பிரேமதாஸ அவர்கள் பிரதித் தலைவராக உள்ளார். மூன்று பிரத்தலைவர்கள் பதவியில் ஒன்று சிறுபான்மை சமூகத்தில் ஒருவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உப தலைவர் பதவியிலும் மாற்றம் இடம்பெறவுள்ளதோடு, ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேக்கா அவர்கள் உப தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது கட்சியின் உப தலைவராக நீதி அமைச்சர் ரவி கருநாணாயக்க அவர்கள் செயற்படுகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் மீளாய்வு செய்வது பற்றி எதிர்வரக்கூடிய உள்ளுராட்சி தேர்தல் நடைபெறுகின்ற தினம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளது.