க.பொ.த உயர்தர பரீட்சை வழமை போன்று - பரீட்சை ஆணையாளர் நாயகம்

க.பொ.த உயர்தர பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள பரீட்சை நிலையங்களில் எந்த வித தடைகளும் இன்றி நடைபெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

ரயில்வே பணிப்பகிஸ்கரிப்பு இடம்பெற்ற போதிலும் அனைத்து பரீட்சாத்திகளும் உரிய நேரத்தில் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
 
பரீட்சத்திகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் இலங்கை போக்குவரத்து சபையும், தனியார் போக்குவரத்து சபையும், பாதுகாப்பு பிரிவினரும் வழங்கிய ஒத்துழைப்புக்கு பரீட்சை ஆணையாளர் நாயகம் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.