மேலதிக பஸ் சேவைகள்

வார விடுமுறையை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதி கருதி, ரயில் பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக ஏற்பட கூடிய சிரமங்களை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தகவல் தெரிவிக்கையில், கொழும்பு கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இன்று மாலை மேலதிக பஸ் சேவையில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.

 

இதேவேளை மேலும் 30 பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு ராணுவத்திடம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.