ரயில் சேவைகள்

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்ற போதிலும் ரயில் சேவைகள் இடம்பெற்றுள்ளன.

இன்று காலை 9 ரயில்கள் பல இடங்களில் இருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

 

கண்டி, அனுராதபுரம்,மஹாவ, ரம்புகணை,காலி, மாத்தறை மற்றும் அவிசாவளை ஆகிய இடங்களில் இருந்து தலா ஒரு ரயில் வீதம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

சிலாபத்தில் இருந்தும் இரண்டு ரயில்கள் சேவையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

இதேவேளை சகல ரயில் நிலையங்களுக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.