சோமலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் கப்பம் இன்றி விடுவிப்பு

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டபட்ட கப்பல் மற்றும் அக்கப்பலின் தலைவர் உட்பட எட்டு இலங்கை பணியாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது குறித்த கடல் எல்லையிலின் வெளியில் பயணித்துக் கொண்டிருப்பதாக அந்த இலங்கையர்களில் ஒருவர் உறுதிசெய்துள்ளார். கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட கப்பலை விடுவிப்பதற்கு, முன்னர் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பம் கோரியிருந்தனர். எனினும், கப்பலிலிருந்த இலங்கையர்கள் விடுவிப்பதற்காக வேண்டி கப்பம் பணமாகவோ அல்லது வேறெந்த வகையிலோ செலுத்தவில்லை.

சோமாலியாக கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு,விடுவிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பான தமது அனுபவத்தை கப்பல் குழுவைச் சேர்ந்த அதிகாரி திலீப் நிசான் இவ்வாறு கூறினார்.
" உண்மையில் நாங்கள் சோமாலிய நேரத்தின் படி மாலை 6 மணிக்கு விடுதலையானோம்.எங்களுக்கு சரியான காரணம் தெரியாது. அவர்கள் எங்களை விடுவிப்பதாக நினைக்காத நேரத்தில் கூறினார்கள். நாங்கள் இப்போது பொஸோகோ துறைமுகத்துச் செல்கின்றோம். பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் எங்களுக்கு பிரச்சினை இல்லை. அரசாங்கத்தின் மூலம் எங்களுக்கு பெரும் ஒத்துழைப்பு கிடைகப்பெற்றது. அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே நாங்கள் விடுதலைசெய்யப்பட்டதாக நான் நினைக்கின்றேன். அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் எங்களுடன் தனிப்பட்டரீதியில் பேசினார். அரசாங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கும் , எங்களை விடுவிப்பதற்காக கடைசிநேரம் வரையில் போராடியதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.நாங்கள் மிகவும் மரண பயத்தில் இருந்தோம்." என்று அவர் கூறினார்.

எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல், அதிலிருந்த இலங்கையர்களுடன் விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கப்பல் சோமாலியாவின் பொஸோகோ துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.