தமிழ் முற்போக்குக் கூட்டணியை பதிவுசெய்வதற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

தமிழ் முற்போக்குக் கூட்டணியை பதிவுசெய்வதற்கு தொடர்புபட்ட ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டமைப்பின் தலைவர் தேசிய நல்லிணக்கம், கலந்துரையாடல்கள் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ மனோ கணேசன், பொதுச் செயலாளர் பழனி திகாம்பரம், பிரதி பொதுச் செயலாளர் எம். திலகராஜ் ஆகியோர் அது தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையகத்திற்கு கையளித்தனர்.மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம்,  வி.இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து 2015இல் தமிழ் முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டது. இங்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அவர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.