ஐக்கிய அரபு இராச்சியத்தின் காலநிலை மாற்ற அமைச்சர் - அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்; அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும்; ஐக்கிய அரபு இராச்சியத்தின் காலநிலை மாற்ற அமைச்சர் தானி அல் ஸாயுடியிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. 

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது.  சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் உலக சர்வதேச நகர மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அமைச்சர்களுடன், அமைச்சர் ரவூப் ஹக்கீம் இருநாட்டு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடினார்.