புற்றுநோய் மருந்துகள் மற்றும் ஸ்டேன்ஸ் விலைகளை குறைப்பதற்கு அமைச்சர் ராஜித தீர்மானம்.

புற்றுநோய் மருந்துகள் மற்றும் ஸ்டேன்ஸ் விலைகளை குறைப்பதற்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன தீர்மானமானித்துள்ளார். புற்றுநோய் மருந்துகள் மற்றும் ஸ்டேன்ஸ் என்பன சந்தையில் விற்கப்படுகின்ற விலையின் அளவு மற்றும் விலையை குறைப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் பற்றிய அறிக்கையொன்றை அமைக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்தியாவசமான மருந்துகள் வகைகள் 48இன் விலையை குறைத்தல், கண்வில்லையின் விலையைக் குறைத்தல் என்பவற்றை செய்ததுபோல் இந்த விலை நிர்ணயத்தையும் செய்யவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.அதன்படி குறித்த அறிக்கையை விரைவாக தயார்செய்யுமாறு தேசிய ஒளடதங்கள் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் அஸித டி ஸில்வாவுக்கு அமைச்சர் அறிவித்துள்ளார். அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலை கட்டிடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளை அங்குராப்பனம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மருந்து நிறுவனங்களுக்கு கட்டுப்படாமல் மருந்துப் பொருட்களின் விலைகளை எதிர்காலத்தில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.