இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு ஆரம்பம்

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இராச்சியங்களின் நிலையான மற்றும் சீரானஅபிவிருத்தியை நோக்காக்கொண்டு நடைபெறுகின்ற இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இன்று(7ஆம் திகதி) பிற்பகல் ஜகர்தா நகரில் ஆரம்பமானது. அதன் அங்குரார்பண வைபவத்தில் கௌரவ ஜனாதிபதி மைத்ரீபால சிறிசேன அவர்கள் பங்கேற்றார்.

ஜகர்த்தா நகரில் நடைnறுகின்ற மாநாட்டுக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள்
இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜோகோ விட்டூவினால்  சிறப்பாக வரவேற்கப்பட்டார்.இந்து சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள 21 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த மாநாட்டில்  கலந்துகொண்டுள்ளதுடன், அவர்களிடமும் இலங்கை ஜனாதிபதிக்கு பெரும் வரேவற்பு காணப்பட்டது. கௌரவ ஜனாதிபதி மைத்ரீபால சிறிசேன அவர்கள் இந்நிகழ்வில் தனது விசேட உரையை நிகழ்த்தினார்.