நியூசிலாந்து வர்த்தக பிரதிநிதிகள் - அமைச்சர் ஹரின் பெனான்டோ சந்திப்பு

நியூசிலாந்து வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் தொலைத்தொடர்பு , டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னான்டோவிற்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கையின் சார்பில் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தி நியூசிலாந்து தூதுவர் மற்றும் வர்த்தக அமைச்சரான டேவிட் பெனட் கலந்துகொண்டனர்.


இது தொடர்பாக நியூசிலாந்து வர்த்தக பிரதிநிதிகள் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படவுள்ள தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட பிரிவுகளில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.