பாடசாலை மாணவர்கள் 10,000 பேருக்கு பாரம்பரிய கைப்பணிப் பொருட்கள் கைத்தொழில் பயிற்சி

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை என்பன இணைந்து ஒழுங்கமைத்துள்ள அருங்கலைகள் நவோதா நிகழ்ச்சித்திட்டம் இன்று 6ஆம் திகதி பத்தரமுல்ல அபேகம வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் படசாலை மாணவ,மாணவிகள் 10,000 பேருக்கு பாரம்பரிய கைப்பணிப் பொருட்கள் கைத்தொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூத்தீன் மற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.