20 கிராமிய பாதைகள் அபிவிருத்தி

20 கிராமிய பாதைகளை அபிவிருத்தி செய்வதற்காக 100 லட்சம் ரூபாவை பலப்பிற்றிய பிரதேச சபை ஒதுக்கியுள்ளது.

நீண்ட காலமாக சேதமடைந்திருந்த வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

விவசாய உற்பத்திகளை சந்தைக்கு எடுத்துச் செல்வதற்காக இந்த பாதைகள் மிகவும் முக்கியம் பெறுகின்றன.

பிரதேச சபை நிதியத்தின் ஊடாக இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.