முதலாவது கடற்படை மரைன் படைப்பிரிவின் பயிற்சி நிறைவு

முதலாவது கடற்படை மரைன் படைப்பிரிவின் பயிற்சி நிறைவு மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (27) முற்பகல் மன்னார், முள்ளிக்குளம் இலங்கை கடற்படையின் வயம்ப தலைமையகத்தில் நடைபெற்றது.

முள்ளிக்குளம் கடற்கரையில் இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவினர் எதிரி இலக்குகள் மீது மேற்கொள்ளும் பயிற்சிகளைக் காட்டும் கண்காட்சியையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவின் இணையத்தளத்தையும் ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் நினைவுப் பரிசொன்றை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கினார்.

பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு படை தலைமை அதிகாரி எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக்க, இராணுவ தளபதி லெப்ரினன்ற் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, வயம்ப, கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பி.ஆர்.பீ.திஸாநாயக்க, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.