காலநிலை

நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ , மத்திய , மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் மழை பதிவாகக்கூடும.

மடடக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு மத்திய மாகாணங்களிலும் புத்தளம் மாத்தறை மொனறாகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட ங்களிலும் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடற்கரையோர பகுதிகளில் ஓரளவு மழை பெய்யக்கூடும்.

மீனவர்கள் மற்றும் கடலில் பயணம் செய்வோர் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.