சமுர்த்தி நிவாரணம் - புதிய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரல்

சமுர்த்தி நிவாரணத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களையும், மேன்முறையீடுகளையும் ஏற்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 31ம் திகதிக்குள் தகைமையுள்ள குடும்பங்கள் தெரிவு செய்யப்பட உள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

சமகாலத்தில் சமுர்த்தி அனுகூலங்களைப் பெறாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பங்களைப் பிரதேச செயலாளர் ஊடாக அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த விண்ணப்பத்தில் குடும்பத் தலைவரது பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், வயது, குடும்ப உறுப்பினர்களின் பெயர், சமகால வருமான விபரங்கள் முதலான விடயங்கள் உள்ளடங்கியிருப்பது அவசியமாகும்.