தலவில புனித அன்னம்மாள் தேவாலய ஆராதனைகளில் ஜனாதிபதி

தலவில பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலவில புனித அன்னம்மாள் தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையில் பங்குபற்றினார்.

இந்த தேவாலயம் நிர்மாணிக்கப்பட்டு 250 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு சஞ்சிகையும் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் விஜயத்தின்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வெரன்ஸ் மென்டிஸ் ஆயர் உள்ளிட்ட தலவில பிரதேச கிறிஸ்தவ மத பாதிரியார்கள் பங்குபற்றினர்.