ஸ்ரீலங்கா கிரிக்கெட் அலுவல்களுக்குப் பொறுப்பாக தகுதிவாய்ந்த அதிகாரி நியமனம்

விளையாட்டு அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறியிடம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை நிர்வகிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் உயர் பதவிகளுக்கு பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெறவிருந்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் தேர்தல் ஜுன் 14ம் திகதி வரை பின்போடப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அலுவல்களுக்கு திரு.கமல் பத்மசிறியின் பொறுப்பாக இருப்பார்..