கேகாலை மாவட்டத்தில் அனைத்து தேர்தல் தொகுதிகளும் உள்ளடங்கும் வகையில் ரூபா. 5000 இலட்சம் செலவில் வீதிகள் புணரமைக்கப்படவுள்ளன.

கேகாலை மாவட்டத்தில் அனைத்து தேர்தல் தொகுதிகளும் உள்ளடங்கும் வகையில் ரூபா. 5000 இலட்சம் செலவில் வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 9 தேர்தல் தொகுதிகளும் உள்ளடங்கும் வகையில் ஒரு தேர்தல் தொகுதிக்கு ரூபா. 600 இலட்சம் என்ற ரீதியில் வீதிகள் புணரமைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வீதிகளுக்கு கற்கள் நிரப்பப்பட்டு தார் போடப்படும்.
கேகாலை மாவட்ட அரசியல் தலைவர்கள் வழங்கிய ஆலோசனைக்கு ஏற்ப புணரமைக்கப்படவுள்ள வீதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 47 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த யோசனைகளுக்கு ஏற்ப ரூபா. 3100 இலட்சத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஒப்பந்த நிறுவனமாக அரசாங்கத்தின் இணைந்த நிறுவனமான மகநெகும வீதி அபிவிருத்தி நிறுவனம் செயற்படவுள்ளது.