பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு அவுஸ்ரேலியாவின் டக்கின் பல்கலைக்கழகத்தினால் டாக்டர் பட்டம்.

அவுஸ்ரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கின்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு அவுஸ்ரேலியாவின் டக்கின் பல்கலைக்கழகத்தினால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வுக்கு பல்கலைக்கழக உபவேந்தர்கள், விரிவுரையாளர்கள், பட்டதாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்ரேலியாவின் கீலொன் கி டக்கின் பல்கலைக்கழகத்தின் பட்டமழிப்பு விழா
நிகழ்வின் போது நீதித்துறை தொடர்பில் இந்த கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் பொருளாதாரம்,கல்வி மற்றும் மனிதஉரிமை முன்னேற்றத்துக்கு வழங்கிய ஒத்துழைப்பை குறிக்கும் விதமாக இந்த சர்வதேச கௌரவம் கிடைப்பெற்றுள்ளதாக பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டீ சில்வா கூறினார்.
நல்லிணக்கத்திற்கான தேவையை வலியுறுத்தி, முரண்பாடுகளை தீர்த்து, பொறுப்புடமையான நோக்கம் மற்றும் எதிர்காலத்தில் அது தொடர்பில் நம்பிக்கை கொள்ளமுடியும் என்பதாலும் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு இப்படியான ஒரு கௌரவ பரிசு வழங்கப்படாதாக டக்கின் பல்கலைக்கழகத்தின் ஊடக சந்திப்பின் போது கூறப்பட்டது.