அவளின் குரல் உங்கள் மத்தியில் எங்களின் குரலால். நாங்கள் அவளுக்காகவே- தாய்நாட்டின் புதல்விகள்

இலங்கையின் பெண்களின் சனத்தொகை 56% ஆகக் காணப்பட்டாலும், நாட்டில் சட்டம் இயற்றும் இடமான பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெண்கள் வெறும் 5%ஆகவே காணப்படுகின்றனர். மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 2% ஆகும். அதிலும் இளம் மகளிர்களின் அரசியல் ஈடுபாடு மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. பிற நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்குகின்றபோது இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அதேபோல் பெண்களுக்கு பாதைகளில், வேலைத்தளங்களில், வீடுகளில் மட்டுமின்றி சைபர் வலைத்தளங்களிலும் கூட பல்வேறுபட்ட முறைகளில் நடைபெறுகின்ற அநீதிகள் தொடர்பில் சட்டங்கள் உருவாக்கபட்டிருக்காமையும்,நாட்டில் கொள்கைகளை உருவாக்கின்ற தீர்மானங்களை எடுக்கின்ற அரசியல் அதிகாரிகள் மத்தியில் பெண்கள் பிரிதிநிதித்துவம் குறைந்து காணப்படுவது மிகவும் தாக்கம் செலுத்தியிருக்கின்றது. தாய்நாட்டின் புதல்விகள் அமைப்பு இந்த நாட்டின் இளம் மகளிர்களின் உரிமைகளுக்காக வேண்டி எழுந்துநிற்கின்ற ஒரு அமைப்பாக இந்த நிலமைகள் தொடர்பில் அவர்களின் கோஷங்களை இப்படி வெளிக்காட்டினர். Be her Voice என்ற டக் லைனின் கீழ் இந்தப் படங்களை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தனர். "அவளின் குரல் உங்கள் மத்தியில் எங்களின் குரலால். நாங்கள் அவளுக்காகவே" என்பது இந்த அங்கத்தின் கருப்பொருளாக அமைந்திருந்தது.