விஞ்ஞானரீதியிலான ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கை மற்றும் ஜரோப்பா அணு ஆராய்ச்சி நிறுவனம் சர்வதேச ஒப்பந்தத்தில் கைச்சாத்து

இலங்கை மற்றும் ஜரோப்பா அணு ஆராய்ச்சி நிறுவனம் (CERN) இடையே உயர் சக்தி பௌதீக விஞ்ஞானம் தொடர்பில் விஞ்ஞானரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சர்வதேச ஒத்துழைப்பு ஒப்பந்தம (ICA) கடந்த 8ஆம் திகதி ஜெனீவா நகரில் கைச்சாத்திடப்பட்டது.

இதன் போது, இரு சாரார்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும், CERN சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான பணிப்பாளர் பதவியை வகிக்கின்ற சாலட் வரகாவுல்லேயும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இச்சந்தர்ப்பத்தில் அமைச்சர் உரையாற்றுகையில், CERN போன்ற சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனங்களுடன் விஞ்ஞான ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவத்துவதன் ஊடாக விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சித் துறையை மேம்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு பங்களிப்புச் செய்யமுடியமாக இருப்பதுடன், நாட்டில் விஞ்ஞானக் கல்வியை புகழ்பெறச் செய்வதற்கும் இது உதவும் என தெரிவித்தார்.