இலங்கையின் தகவல் அறியும் சட்டம் உலகில் மூன்றாவது இடத்துக்கு

உலக நாடுகளின் தகவல் அறியும் சட்டத்தை தரப்படுத்துகின்ற கனடாவின் நீதி மற்றும் ஜனநாயக மையம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட புதிய தரப்படுத்தல் பட்டியலின் அடிப்படையில் இலங்கையின் தகவல் அறியும் சட்டம், உலகின் சிறந்த மூன்றாவது தகவல் அறியும் சட்டமாக தரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

முதலில் இலங்கையின் தகவல் அறியும் சட்டம் உலகின் சிறந்த ஏழுவாது சட்டமாக இருந்தாலும், அதற்கு சில மாதங்களுக்குப் பின்னர் அது ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. எனினும், கடந்த வாரம் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க அவர்களால் கஸட் பத்திரத்தின் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நீதி மற்றும் நிபந்தனைகள் கருத்தில் கொள்ளப்பட்டு, இலங்கை பெற்று இருந்த புள்ளிகள் மேலும் 10 புள்ளிகளால் அதிகரித்ததன் காரணமாக ஏனைய நாடுகளை பின்தள்ளிவிட்டு இலங்கை மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டது. அந்த நீதி மற்றும் நிபந்தனைகள், தகவல் அறியும் ஆணையகத்தின் உதவியுடனும், இணக்கப்பாட்டுடனுமேயே கஸட் செய்யப்பட்டது.

‘பொதுவாக நீதி மற்றும் நிபந்தனைகள் பற்றி குறிப்பிடும் போது நாடொன்று தரப்படுத்தலில் முன்னேறுவது மிக அரிதாகவே நடக்கின்றது. எனினும் இலங்கை பெற்றுள்ள இந்த வெற்றி தொடர்பில் இலங்கையின் ஊடகத்துறை அமைச்சருக்கும், தகவல் ஆணையகத்துக்கும் எங்களது பாராட்டுக்கள் கிடைக்கவேண்டும்’ என கனேடிய மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வொப் மெண்டல் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த தரப்படுத்தலின் அடிப்படையில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்கள் முறையே மெக்ஸிகோ மற்றும் சேர்பியாவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த புதிய வெற்றியின் மூலம் தெற்கு ஆசியாவில் முதலாவது சிறந்த தகவல் அறியும் சட்டத்தைக் கொண்ட நாடு என்ற பெருமை இலங்கைக்குக் கிடைத்துள்ளது. உலகத் தரப்படுத்தலுக்கு அமைய இந்தியாவுக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.

‘இது இலங்கை நாடு என்ற ரீதியில் பெற்றுக்கொண்ட சிறந்த வெற்றியாகும். அத்துடன் மக்களுக்கு தகவல் அறியும் உரிமையை பெற்றுத்தருவதற்கு தொடங்கிய நேரத்திலேயே நாங்கள் உலகின் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது தொடர்பில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டியதொரு விடயமாகும். நல்லாட்சியை சக்தி பெறச்செய்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் மேற்கொள்கின்ற முயற்சிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கப்பெறுவதன் மூலம் மிகவும் சக்தியடைகின்றோம்.’ என அமைச்சர் கயந்த கருணாதிலக்க அவர்கள் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் ஒரு தேர்தலின் மூலம் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் சட்டம், இம் மாதம் மூன்றாம் திகதி முதல் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

இதுவரையில் 800க்கும் அதிகமான தகவல்களைக் கோரி அரச நிறுவனங்களுக்கு தகவல் கோரிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. சட்டம் நிறைவேற்றப்பட்ட முதலாவது நாளிலேயே 300இற்கும் அதிகமான கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றன.