வடமாகாண ஆளுநரின் இணைப்புச்செயலாளராக சுந்தரம் டிவகல்லா

வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா நியமிக்கப்பட்டுள்ளார் .

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் அவருக்கான நியமனக் கடிதத்தினை நேற்று கையளித்தார்.

இதுவரை காலமும் இணைப்புச் செயலாளராக கடமை ஆற்றிய சுமணபால ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில் இணைப்புச் செயலாளராக தமிழரான சுந்தரம் டிவகல்லாலா நியமிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.