பஸ்வண்டிகள் பயணிப்பதற்கு முன்னுரிமைப் பாதை பத்ரமுல்லையிலிருந்து கொழும்பு கோட்டை வரை

போக்குவரத்து நெரிசல்களை குறைக்கும் நோக்கில் பஸ்வண்டிகளுக்கு முன்னுரிமைப் பாதையை அமைத்தல் திட்டத்தின் கீழ் முதலாவதாக பத்ரமுல்லையிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலான பாதையில் அந்த சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தெடார்ந்து ஹைலெவல் பாதைக்கு, காலி வீதிக்கு மற்றும் லோலெவல் பாதைக்கு இந்த முறையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பஸ்வண்டிகளுக்கு முன்னுரிமை பாதை அமைப்பது தொடர்பில் தேடியறிந்து தேவையான அறிக்கையை வழங்குவதற்காக வேண்டி, கொரிய அரசாங்கத்தின் போக்குவரத் துறையின் விசேட நிபுணர்கள் இருவர் இலங்கைக்கு வந்திருப்பதுடன், அவர்கள் இதுவரையில் சம்பந்தப்பட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.