தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி -இலங்கை 2ஆம் இடம்

தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இருதினங்கள் நடைபெற்ற இப்போட்டியில் இதுவரையில் 20 தங்கப்பதக்கங்களுடன் மொத்தமாக 50 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது.

இலங்கை 12 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்களை பெற்று 2ம் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.