RTI சட்டத்தின் பின் மக்களின் நிலை - ஆவணப்படுத்தல் வெளியீடு

இலங்கையில் தகவலறியும் உரிமை (RTI) சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஓரு வருடம் நிறைவடைந்துள்ளது. 

இது தொடர்பாக சமூக சிற்பிகள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள, '"RTI Law in Sri Lanka - The Dawn of a FISHBOWL REGIME"' என்ற தலைப்பிலான பொதுமக்களின் குரல்களை வெளிப்படுத்தும் ஆவணப்படுத்தலொன்று வெளியிடப்படவுள்ளது.

இந்த நிகழ்வு ஹட்டன் கல்வி அபிவிருத்திக்கான இலங்கை நிறுவக நிலையத்தில் (SIDA Centre for Education Development, Hatton) நாளை (26) காலை 10 மணிமுதல் 11.30 மணிவரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வின் கௌரவ விருந்தினராக, தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளரான கிஷாலி பின்டோ ஜயவர்தன கலந்துகொள்ளவுள்ளதுடன், விசேட விருந்தினர்களாக, சட்டத்தரணி ஈ. தம்பையா, பிஜிக்கான வருகை நீதிபதி டொக்டர் ஜயந்த டி அல்மெய்டா குணரத்ன, வீரகேசரி பத்திரிகையின் தகவலறியும் உரிமை தொடர்பான பத்தியாளர் கிங்ஸ்லி கோமஸ் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.