1600 ஏக்கர் காணியில் மரமுந்திரிகைச் செய்கை

குருநாகல் மாவட்டத்தில் மரமுந்திரிகைச் செய்கை வெற்றியளித்துள்ளதால் விவசாயிகள் பெருமளவு வருமானத்தை பெற்றுவருகின்றனர். 

இதன் காரணமாக மரமுந்திரி உற்பத்தியாளர்கள் கூடியவளவு இலாபமடைந்து வருகின்றனர்.


நிக்கவரட்டிய, பிங்கிரிய, பண்டுவஸ்நுவர, கல்கமுவ, மாகோ, ஆனமடுவ ஆகிய பிரதேசங்களில் 1600 ஏக்கர் காணியில் மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவாசய திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.