திருகோணமலை – மீனவர்கள் தங்குமிட கட்டடம்

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விளாங்குளம் கிராமத்தில், மீனவர்கள் தங்குமிட கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இதற்காக ஒன்று தசம் இரண்டு-ஐந்து மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

 

கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன, கால்நடை அபிவிருத்தி மீன்பிடி கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பின் கீழ், இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

 

இதன்மூலம், அந்தப் பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் நன்மை அடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது