ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இரத்து

இன்று நடத்தப்படவிருந்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அடுத்த செயற்குழு கூட்டத்தை நடத்துவதற்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் முதன்முறையான ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் கூடியது.
இதன்போது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 அமைச்சர்கள, தாம் வகிக்கும் அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகுவதற்கு மத்திய செயற்குழுவின் அனுமதியை கோரியிருந்தனர்.
அதுதொடர்பான அனுமதியை வழங்குவதற்கான இன்று மத்திய செயற்குழு கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.