மியன்மார் ஜனாதிபதி இராஜினாமா

மியன்மார் ஜனாதிபதி Htin Kyaw தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
இதற்கான காரணம் தொடர்பில் எந்த தகவலும் வௌியாகவில்லை.
மியான்மர் நாட்டில் 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் பல ஆண்டுகளாக நீடித்த இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. ஜனாதிபதியாக Htin Kyaw பதவியேற்றார்.
71 வயதான Htin Kyaw இற்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கடந்த சில மாதங்களாக அவர் பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். எனவே உடல்நிலை காரணமாகவே தற்போது அவர் பதவி விலகியிருக்கலாம் என கூறப்படுகிறது.