பங்களாதேஷ்- இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று

சுதந்திர வெற்றிக் கிண்ணத்திற்கான கிரிக்கட் சுற்றுத்தொடரின் ஐந்தாவது போட்டி இன்று இரவு ஆரம்பமாகின்றது.

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றது.

இலங்கை-பங்களாதேஷ் அணிகள் தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன.

இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கான அடுத்த போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இலங்கை அணியுடன் அண்மையில் இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்றதால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.