புதிய நீர் விநியோகத்திட்டங்களை துரிதப்படுத்துமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் உத்தரவு

கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகத்திட்டங்களை மேம்படுத்துமாறு நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தனது அமைச்சில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் இந்த  இந்த பணிப்புரையை விடுத்தார்.

புதிதாக ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நீர் விநியோகத்திட்டங்களை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் 2020 ஆம் ஆண்டளவில் தங்குதடையற்ற நீர் விநியோகத்தை வழங்குவது இதன் நோக்கமாகும்.

கொழும்பு அபிவிருத்தி திட்டத்திற்கு இணங்க நிர்மாணிக்கப்பட்டுவரும் பாரிய வீடமைப்புத் திட்டம் ஹோட்டல் தொகுதி, துறைமுக நகரம் ஆகிய பாரிய அபிவிருத்திகள் பூர்த்தி அடைந்ததன் பின்னர் ஏற்படக்கூடிய நீர்த்தேவையை பூர்த்தி செய்வது பற்றியும் அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் ஆராயப்பட்டது.