இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி

சுதந்திர கிரிக்கெட்வெற்றிக்கிண்ண சுற்றுத்தொடரின், இரண்டாவது போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, 6 விக்கட்டுக்களால் பங்களாதேஷ் அணியை  தோற்கடித்துள்ளது. 

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

லிற்றன் டாஸ் என்ற வீரர் ஆகக்கூடுதலாக 34 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியஅணி , 19 ஆவது ஓவரில் வெற்றி இலக்கை தாண்டினார்கள் ஷிகர் தவான் 55 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.