ஜெயலலிதா மரணமடைந்துள்ளார் என அப்பலோ வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னால் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தனது 68வது வயதில் மரணமடைந்துள்ளார் என பீபீசீ செய்திச் சேவை அறிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை மாலை அவர் மரணமடைந்தார் என இந்தியாவில் வெளியான செய்தி பொய்யானது எனவும், இப்போது அவர் மரணமடைந்துள்ளார் என அப்பலோ வைத்தியசாலை உறிதிப்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக் கிழமை இரவு ஏற்பட்ட கடுமையான நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவர் திங்கட்கிழமை இந்திய நேரம் இரவு 11.30மணிக்கு மரணமடைந்தார் என அப்பலோ வைத்தியசாலை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர் நோயுற்றிருந்த நிலையில் வைத்தியசாலைக்கு அருகில் கூடியிருந்த ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கு 15,000 பொலீஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர் குணமடையவேண்டும் என ஆதரவாளர்கள் இறைவனை வழிப்பட்டுக் கொண்டிருந்தவேளை, மேலும் ஒரு குழுவினர் பொலீஸ் சோதனைச் சாவடிகளுக்கு தாக்குதல் நடத்தினர் என பொலீஸார் தெரிவித்துள்ளனர். தமிழ் நாட்டின் வணிக அமைச்சராகக் கடமையாற்றுகின்ற ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் அடுத்த முதலமைச்சராக பெயர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தனது அனுதாபச் செய்தியை தனது முகப்புகத்தகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளதோடு, அவர் தமிழ் நாட்டுக்கு சென்றுள்ளார் என ஊடகங்கள் தெவிக்கின்றன.