இலங்கை அணி 75 ஓட்டங்களால் அபார வெற்றி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

டாக்கா மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட்போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு210 ஓட்டங்களைப் பெற்றது. குசல் மெண்டிஸ் 70 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 17 ஓவர்கள் 3 பந்துகள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதன்படி 2 போட்டிகளைகொண்டு ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி 2 - 0 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றுள்ளது.