நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க இடமளிக்கக்கூடாது

நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க இடமளிக்கக்கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரா தெரிவித்தார்.


உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து நேற்று அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.


இந்த பேச்சுவார்த்தைக்கு பினனர்; பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி நாட்டின் ஸ்தீரத்தன்மை உறுதிப்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

நாட்டுக்கு பொருத்தமான தீர்மானத்தை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் மேலும் இவ்வாறான நிலைமை தொடரக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.