களனிவெலி ரயில் பாதை சில தினங்களுக்கு மூடப்படும்

களனிவெலி ரயில் பாதை 16 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி காலை வரை முழுமையாக மூடப்படும்

களனிவெலி ரயில் பாதை எதிர் வரும் 16 ஆம் திகதி இரவு 8 மணி தொடக்கம் 19 ஆம் திகதி காலை 4 மணிவரையில் முழுமையாக மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ரயில் பாதையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான ரயில் சேவையும் இடம் பெறாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேற்கொள்ளப்படவுள்ள உட்கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு செயற்பாடுகள் காரணமாகவே இந்த ரயில் பாதை மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.