சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் - இராணுவ தளபதி சந்திப்பு

திரு கொன்ஸ்டன்டினோஸ் மொர்டோபொலோஸ் தலைமையிலான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் மூவர் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்தனர்.

இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதியின் பணிமனையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.


இராணுவ தளபதியியுடனான இந்த சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டது. மேலும் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இராணுவத்தின் செயற்பாடுகள் மற்றும் பணிகள் விஸ்த்தரிக்கும் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

 

இதன்போது லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இராணுவத்துடன் இணைந்து ஆற்றிய சேவையை கௌரவித்து தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தார்.