இலங்கை - இந்திய ரெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது.

இந்தியாவின் கொல்கத்தா ஈடின்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் இரசிகர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதுடன், விளையாட்டின் மீதான ஆர்வத்தைப் பேணுவது பற்றியும் பரிசீலிக்க வேண்டியிருப்பதாக இந்திய அணியின் தலைவர் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

கொல்கொத்தாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு உரையாற்றினார்.

இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகளை பார்க்க வேண்டுமா என்பதை இரசிகர்களே தீர்மானிக்க வேண்டுமென்று விராட்கோலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணிக்கு தினேஸ் சந்திமால் தலைமை தாங்குகின்றார். இந்திய அணிக்கு விராத் கோலி தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.