இலங்கை - இந்திய முதலாவது ரெஸ்ட் போட்டி நாளை

இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

இந்தியாவின் கொல்கத்தா ஈடின்ஸ் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகும் இந்த போட்டியில் மைதானத்தின் அடிப்படை தகுதி குறித்து, நேற்றைய தினம் மீளாய்வு செய்யப்பட்டது.

புற்தரையின் வளம் குறித்தும் விளையாட்டுக்குப் பொருத்தமான சூழ்நிலை குறித்தும் இங்கு நன்கு ஆராயப்பட்டன.

நாளைய தினம் ஈடின்ஸ் கிரிக்கெட் மைதானம் எதிர்பார்த்தபடி தயாராகுமென்று இந்திய கிரிக்கெட் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அணிக்கு தினேஸ் சந்திமால் தலைமை தாங்குகின்றார். நாளைய போட்டியில் சகல துறை ஆட்டக்காரர் அசேல குணரத்ன விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு விராத் கோலி தலைமை தாங்குகின்றார்.