இலங்கை - பாகிஸ்தான் ரி-ருவன்ரி கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டி

இலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ரி-ருவன்ரி கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டி பாகிஸ்தானின் லாகூர் நகரில் கடாபி விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ளது. 

போட்டி மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இன்று காலை லாகூரைச் சென்றடைந்தன. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இரண்டு அணி வீரர்களும் அலமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த போட்டி முன்னர்  இரவு 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்று கிரிக்கட் பேரவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. காலநிலையின் காரணமாகவே புதிய தீர்;மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஆரம்ப வைபவம் மாலை 4.45 க்கு ஆரம்பமாகவுள்ளது. பார்வையாளர்கள் பிற்பகல் 3.00 மணிக்கு மைதானத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
போட்டியின் ஆரம்ப வைபவம் 4.45ற்கு இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெறும் போட்டியைப் பார்ப்பதற்காக பாகிஸ்தான் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக உயர்ஸ்தானிகர் மேஜர் ஜென்ரல் ஜயநாத் லொக்கு கெட்டகொடகே தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் லாகூரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 
 
 
எட்டு வருடங்களுக்குப் பின்னர் இலங்கை அணி பாகிஸ்தானில் பங்கேற்கும் இந்தப் போட்டியை விளையாட்டு அமைச்சர் என்ற வகையில் தானும் பார்வையிடவுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் திலங்க சுமதிபாலவும் பார்வையிட உள்ளனர்.