கைப்பணித்துறையை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை

தென் மாகாணத்தில் கைப்பணித்துறையை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென தொழிற்பயிற்சி மற்றும் ஆற்றல் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
ஹபராதுவ பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.
முதல் கட்டமாக ரேந்தை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள் வழங்கப்படுமென அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.