உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் அடங்கிய ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் இன்று கையளிப்பு

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான திருத்த சட்டமூலம   ஒழுங்கு விதிகள் அடங்கிய ஆவணம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.
 
 
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்களது கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்வது இதன் நோக்கமாகும். அவர்களது கருத்துக்களும் யோசனைகளும் கிடைக்குமாயின் அது பற்றியும் கவனம் செலுத்தப்பட இருக்கின்றது. 
 
 
இது தொடர்பான சட்ட மூலம் அடுத்த வாரம் வர்த்தமானி மூலம் வெளியிடப்படும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
 
 
இதனைத் தொடர்ந்து ஆணைக்குழுவிற்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினத்தை அறிவிக்க முடியும் என்றும் அதற்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி குறிப்பிட்டார்.